George / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமய்யா நடித்துள்ள திரைப்படம் பைரவா திரைப்படத்தின் பாடல் வௌியீட்டு விழா இப்போது விழா ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதிரெட்டி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பைரவா இசை வெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம். இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.
காரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம் நாடு திரைப்படத்தில் அவர் நடித்தார். அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசைவெளியீட்டு விழாவை இரத்து செய்துவிட்டோம்.
அதோடு, இளைய தளபதி விஜய்யும் மேற்கண்ட காரணத்துக்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அதனால், எளிமையான முறையில் வரும் 23 ஆம் திகதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
12 minute ago
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
20 minute ago