George / 2016 ஜனவரி 30 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்புவின் பிறந்த நாளான பெப்ரவரி 3ஆம் திகதி அவர் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீப் சோங் என்ற பெயரில் ஆபாசப் பாடலை உருவாக்கியதுக்காக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
எனக்கும் அதற்கு சம்மந்தமில்லை என்று கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸ் நிலையத்தில் இரவோடு இரவாக சென்று விளக்கம் அளித்துவிட்டார் அனிருத்.
இதை வட்ஸ்அப்பில் வெளியிட்டவர்கள் மேல்தான் தப்பு உங்களுக்குப் பிடிக்கலைன்னா கேட்காதீங்க. என்று எடக்கு மடக்காகவே பேசி வரும் சிம்பு இன்னொரு பக்கம் நீதிமன்றத்திலும் வழக்குமேல் வழக்கு தொடுத்து வருகிறார்.
இறுதியாக, நீதிமன்றம் கொடுத்த கெடுவின்படி நேற்று அவர் கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அவர் ஆஜராகாதது மட்டுமில்லை, தான் ஆஜராக மேலும் கெடுவிதிக்கும்படி நேற்று புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதனால் அவர் மீது கடும் கோபத்தில் பொலிஸார் உள்ளார்களாம்.
இந்நிலையில், பெப்ரவரி 3 ஆம் திகதி சிம்புவுக்கு பிறந்தநாள். அன்றைய தினம் சிம்பு நடித்த இது நம்ம ஆளு திரைப்படத்தின் இசைவெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் டி.ராஜேந்தர்.
அன்றைக்கு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவும் உள்ளார். இதுவரை தலைமறைவாக உள்ள சிம்பு அன்றைய தினம் நிச்சயம் வெளியே தலைகாட்டித்தான் ஆக வேண்டும். எனவே பெப்ரவரி 3 அன்று சிம்புவை கைதுசெய்ய பொலிஸார் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago