2025 மே 14, புதன்கிழமை

பொலிவூட் தொடரில் நீது சந்த்ரா

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகை நீது சந்த்ராவை தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு „தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் திரைப்படங்களில் நடித்தார். பொலி வூட்டில் பிசியாக நடித்தவர் இப்போது, அமெரிக்க டி.வி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், 'ஏற்கெனவே சில ஆங்கில திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எனவே எனக்கு ஆங்கில மொழியில் நடிப்பது சிரமமில்லை. நான் டேக்குவாண்டோ சண்டையில் 4 கறுப்பு பட்டிகள் வாங்கியுள்ளேன்.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்காகத் தயாராகும் தொடரில் நான்கு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த பெண்கள், வில்லன்களோடு மோதும் சாகசக்காரிகளாக நடிக்கிறார்கள். அதில் இந்திய பெண்ணாக நான் நடிக்கிறேன். இதுதவிர தற்போது கொரிய அக்ஷன் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன்' என்கிறார் நீது சந்த்ரா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .