George / 2016 ஜூன் 02 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

'சாட்டை' திரைப்படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான மகிமா, அதன் பிறகு 'என்னமோ நடக்குது, மொசக்குட்டி' ஆகிய திரைப்படங்களில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்தார்.
தற்போது, கிராமத்து பெண்ணாக நடித்தால் பாவாடை தாவணிக்குத்தான் லாயக்கு என்று முடிவு செய்தது விடுவார்கள் என்று கருதிய மகிமா, கிளாமருக்கு மாறிவிட்டார்.
அறிவழகன் இயக்கத்தில் அவர் தற்போது நடித்து வரும் 'குற்றம் 23' திரைப்படத்தில் கிளாமராக நடிக்கிறார். கேரக்டரின் பெயர் தென்றல். முதன் முறையாக நகரத்து பெண்ணாக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, 'இதுவரை கிராமிய கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நான், இந்த திரைப்படத்தில் சிட்டி பெண்ணாக நடிக்கிறேன்.
தனது திரைப்படங்களில் கதாநாயகிகளை மிக அழகாக சித்தரிக்கும் தனித்துவமான ஆற்றலை படைத்தவர் இயக்குநர் அறிவழகன்.
இது எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். என்னுடைய தென்றல் வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்' என்கிறார் மகிமா.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago