2024 ஜூன் 03, திங்கட்கிழமை

பாத்ரூம் வீடியோவை லீக் செய்த ஆண் நண்பர்

Editorial   / 2024 மே 21 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது முன்னாள் காதலன் இந்த அளவுக்கு கீழ்த்தரமானவர் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ள பூனம் பாண்டே, அந்த நிகழ்வை நான் இன்னும் மறக்கவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

குளியலறையின் தான் எடுத்த வீடியோவை, தனது முன்னாள் காதலர்தான் சமூகவலைதளங்களில் வெளியிட்டதாகவும், அவர் இவ்வளவு கீழ்த்தரமானவர் என்று தான் நினைக்கவில்லை என்றும், சர்ச்சைப்புகழ் நடிகை தெரிவித்துள்ளார்.

இந்தியில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தொடர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் பூனம் பாண்டே, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்தது.

இதனால், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், மறுநாள் தான் வேண்டுமென்றே அவ்வாறு பதிவிட்டதாக தெரிவித்தார். மேலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவ்வாறு பதிவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரத்தில் பலரும் பூனம் பாண்டேவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், டெல்லியில் சமூக ஆர்வலர் ஒருவர் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மிக மோசமாக அவர் பயன்படுத்தியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் தனது மரணம் குறித்த பதிவுகளை பூனம் பாண்டே நீக்கினார்.

அதற்கு முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரை நிர்வாணக் கோலத்தில் குளியலறையில் பூனம் பாண்டே ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியிட்டது. விளம்பரத்திற்காக அவர் அந்த வீடியோவை வெளியிட்டதாக பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தனது முன்னாள் காதலர்தான் அந்த வீடியோவை வெளியிட்டதாக பூனம் பாண்டே தற்போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதலருடன் தனியாக ஒரு வீட்டில் வசித்தபோது, தங்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்ததாகவும், அப்போது அவர் தன்னை கொடூரமாக தாக்கியதாகவும் பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். அந்த சண்டையின்போது தன்னை கொலை செய்ய முயன்றதால், அந்த வீட்டில் இருந்து தப்பித்து, தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், அப்போது தனது செல்போனை எடுத்துச் செல்ல மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் தன்னை தொடர்பு கொண்ட முன்னாள் காதலன் திரும்பி வராவிட்டால், செல்போனில் இருக்கும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டியதாகவும், ஆனால் அதை தான் கண்டுகொள்ளாததால், அரை நிர்வாணக் கோலத்தில் தானே செல்போனில் எடுத்து வைத்திருந்த குளியலறை வீடியோவை வெளியிட்டு விட்டதாகவும் பூனம் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

தனது முன்னாள் காதலன் இந்த அளவுக்கு கீழ்த்தரமானவர் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ள பூனம் பாண்டே, அந்த நிகழ்வை நான் இன்னும் மறக்கவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் என்ன என்றும், இதுவும் விளம்பரத்திற்காக இருக்குமோ என்றும் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X