2025 மே 16, வெள்ளிக்கிழமை

பறந்து பறந்து சண்டை போடும் எமி

George   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2.0 திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை எமி ஜெக்ஷன், சண்டைக்காட்சியில் ஹொலிவூட் திரைப்பட பாணியில் பறந்து பறந்து சண்டையிடுகின்றாராம்.

மதராசப்பட்டினம் திரைப்படத்தின் ஊடாக தமிழுக்கு அழைத்து வரப்பட்ட எமிஜெக்ஷன். முதல் திரைப்படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்ததால், அடுத்தடுத்து தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி என பலத் திரைப்படங்களில் நடித்து 2.0 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

டாம்ப் ரைடர் வீடியோ கேமில் வரும் லாரா கிரப்ட் என்கிற கதாபாத்திரத்தை தழுவி இவரது வேடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் எமிஜொக்சனுக்கு ஒரு சண்டை காட்சியும் உள்ளதாம். 

இதற்கான ஒத்திகையை ஏற்கெனவே நடத்தி விட்ட ஷங்கர், தற்போது டெல்லியில் ரஜினி -அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியை படமாக்கி வருபவர், அதையடுத்து எமி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சியும் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .