Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
George / 2016 நவம்பர் 22 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
ஆந்திர மாநிலம் சங்கரகுப்தம் என்ற இடத்தில் பிறந்த பாலமுரளிகிருஷ்ணா, ஆறு வயதிலேயே இசைஞானம் கொண்டவராக விளங்கினார். முரளிகிருஷ்ணா என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு இசைமேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி 'பால' என்ற பெயரை சேர்த்து அழைத்தன் காரணமாக அன்று முதல் பாலமுரளிகிருஷ்ணா என்றழைக்கப்பட்டார்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள இவர் சுமார் 25,000 இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் தொடக்கூட பயந்த ராகத்தை இவர் கையாள்வதே இவருடைய தனிச்சிறப்பு.
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை பெற்றை இவருக்கு பிரான்ஸ் அரசு கடந்த 2005ஆம் ஆண்டு செவாலியே விருதையும் வழங்கி கெளரவித்தது.
மேலும் கடந்த 1976ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதையும், 1987ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றவர்.
திரையுலகுக்கு இவர் செய்த பணிகள் மகத்தானவை. குறிப்பாக தமிழ் திரையுலகில் “திருவிளையாடல்” படத்தில் பாடிய “ஒருநாள் போதுமா”, இளையராஜாவின் இசையில் “கவிக்குயில்” திரைப்படத்தில் பாடிய “சின்னக்கண்ணன் அழைக்கிறான்”போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை. மேலும், கடந்த 1967ஆம் ஆண்டு “பக்த பிரகலாதா” என்ற திரைப்படத்தில் நாரதராகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலமுரளிகிருஷ்ணா, நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் விட்டு சென்ற இசை நம்மைவிட்டு பிரியாமல் என்றும் அவரை நினைவில் வைக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
20 May 2025