Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த 25ஆம் திகதி காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்தனர் .
எஸ்பிபி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக அவர் சங்கராச்சாரியார் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
இந்த நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து சங்கரமடம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் சங்கர மடத்தின் உள்ள சங்கராச்சாரியார்கள் மீது எஸ்பிபி ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் வைத்திருந்தார் என்றும் கடந்த பெப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை வேத நாத பாடசாலை தொடங்குவதற்காக சங்கர மடத்துக்கு அவர் தானமாக எழுதி கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் எஸ்பிபி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .