Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 19 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை வீதிகளில் பாடல் பாடி 12 ரூபாய் பிச்சை எடுத்த பொலிவூட் பாடகர் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வீதிகளில் ஒருவர் பொலிவூட் பாடல்களை பாடி பிச்சை எடுக்கிறார். பலர் கடந்துபோக, சிலர் நின்று ரசிக்கின்றனர்.
ஓர் இளைஞர் அருகே வந்து அலைபேசியில் அதனை பதிவு செய்து செல்கின்றார். சிறிதளவே கூட்டம் கூட, பிரபல பாடலொன்றைப் பாடிவிட்டு நடந்து சென்று விடுகிறார் அவர்.
'சங்கீதம் என்கிற கலை ஒரு சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது. நான் இசையைப் பொறுத்தவரை இன்னும் மாணவன்தான். உங்களிடம் நேரடியாக வர ஆசைப்பட்டேன். என்னை இந்த உருவத்தில் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 'என்று சொல்லி கண்ணாடியைக் கழட்டிவிட்டு, 'இந்த உருவத்தில் தெரியலாம்' என்று சொல்ல.. அவரது ஒப்பனை கலைக்கப்படுகின்றது.
யாரென்று ஆவலுடன் பார்த்தால், அவர் பொலிவூட்டின் பிரபல பாடகர் சோனு நிகம். தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
'இந்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாத, ஒரு தெளிவைப் பெற்றுத்தந்த அனுபவமாக உணர்கிறேன். அதே நான்தான். அதே குரல்தான். உடையிலும், வயதான தோற்றத்திலும்தான் வித்தியாசம் காண்பித்தேன்.
யாரோ ஒருவர் வந்து, நீங்க சாப்டீங்களா? என்று கேட்டு யாரும் பார்க்காதவண்ணம் என் உள்ளங்கையில் பனிரெண்டு ரூபாயைக் கொடுத்தார்.
அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இலட்சக்கணக்கில் சம்பாதித்தபோது, உணராத மகிழ்ச்சி, ஏதோ ஓர் இடத்தில், யாரோ ஒருவர் கொடுத்த 12 ரூபாயில் எனக்குக் கிடைத்தது. நிச்சயம் அவரை திரும்ப சந்தித்து, என் அன்பின் வெளிப்பாடாய், அவருக்கு ஏதேனும் பரிசளிப்பேன்.
நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களை நாம் கவனிக்கத் தவறி வருகிறோம். அருகிலேயே இருந்தாலும், நல்லவற்றைப் பாராட்ட மறந்து வருகிறோம். எனக்கும் இது ஒரு பாடம். சந்தோஷம் நம் அருகிலேயே இருக்கிறது. அங்கேயும் இங்கேயும் தேடி ஓட வேண்டாம்' இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார்.
அதனையடுத்து, அவர் மேடையொன்றில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான முன் பாடும் இவரா, அப்படி.. அந்தத் தோற்றத்தில் என்று பிரமிக்க வைக்கிறார்.
நீங்களே வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago