2025 மே 16, வெள்ளிக்கிழமை

மிருதனின் அடுத்த வில்லன்

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கவுள்ளாராம்.

ஒரு திரைப்படம் வெற்றியடைந்தால் அந்த ஹீரோவை வைத்து எடுக்கப்படும் அடுத்தடுத்தத் திரைப்படங்கள் ஏற்கெனவே வெற்றியடைந்த திரைப்படங்களின் சாயலிலேயே எடுக்கப்படுவது திரையுலகில் சகஜமான ஒன்று.

இரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் விடயம்  இது என்பதை உணராமலே வெற்றி சென்ட்டிமெண்ட் என்று அதே அம்சங்களை அடுத்தடுத்த திரைப்படங்களில் வலிய திணிப்பதும் தொடர்கின்றது.

பொலிஸ் அதிகாரியாக ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படத்தில்; வெற்றி அனைவரும் அறிந்தது.  தற்போது ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகியுள்ள மிருதன் திரைப்படத்திலும் ஜெயம் ரவிக்கு பொலிஸ் வேடம்தான். 

மிருதன் திரைப்படமும் ஜெயம் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படத்திலும்  பொலிஸாகவே நடிக்கிறார்.

ரோமியோ ஜூலியட் திரைப்படத்தை இயக்கி வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றிகொடுத்த லக்ஷ்மண், மீண்டும் ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து புதியத் திரைப்படமொன்றை இயக்குகிறார். 

போகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில்தான் மீண்டும் பொலிஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடிக்கின்றார்.

இந்தத் திரைப்படத்திலும் ஹன்சிகா,  ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார். தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சுவாமியே போகன் திரைப்படத்திலும் வில்லனாக  நடிக்கிறார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .