2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண படுக்கையில் ரஜினியின் உயிர் ரசிகர் ஒருவர் தனது இறுதி ஆசை என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், "ரஜினிகாந்த் தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் ரூபாய் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்." என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகருக்கு, நடிகர் ரஜனிகாந்த் ஒரு ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த ஓடியோவில், அந்த ரசிகரை தைரியமாக இருக்க அறிவுறுத்திய ரஜினிகாந்த். நீ விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X