2025 மே 07, புதன்கிழமை

மருத்துவமனையில் ’நானும் ரௌடி தான்’ நடிகர்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி- நயன்தாரா நடிப்பில் உருவாகிக் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் "நானும்  ரௌடி தான்". 

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் லோகேஷ் பாப். 

இவர் முதன் முதலாக ஆதித்யா சேனலில் வந்த 'மொக்கை ஆப் தி டே' நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்குச் சென்றார்.

சன் தொலைக் காட்சியில் வெளியாகும் பல காமெடி நிகழ்ச்சிகளில் லோகேஷ் பாப் பங்கேற்றுள்ளார். 

லோகேஷுக்கு திடீரென ஏற்பட்ட ஸ்டோக் காரணமாக அவருடைய  இடது  கை மற்றும் இடது கால் செயலிழந்து விட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அதற்கு நிதி உதவி வேண்டும் என்றும் கடந்த 1 ஆம் திகதி தகவல் வெளியானது. 

இதனையடுத்து லோகேஷ் பாப்பின் நண்பர் குட்டி கோபி அவரது பேஸ்புக் பக்கத்தில்,  லோகேஷ் பாப்புக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதாகவும், பண உதவி அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறி வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷ் பாப்பை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

அவருடன் ஒரே ஒரு படத்தில் நடித்த லோகேஷை, ஒரு துணை நடிகர் என்று பாராமல் விஜய் சேதுபதி மனித நேயத்துடன் நேரில் சென்று விசாரித்தது அவரது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X