2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மூன்றாவது முறையாக மூன்று முடிச்சு

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடித்த ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமான வனிதா விஜயகுமார், நடிக்க வந்த வேகத்தில் சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார்.

2000ஆம் ஆண்டு ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றாரர். அதன் பிறகு ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

இவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் ஸ்ரீஹரி தன் அப்பா ஆகாஷுடன் இருக்கிறார். மகள்கள் வனிதா விஜயகுமாருடன் இருக்கிறார்கள்.

திரைப்படங்கள் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக யூடியூப்  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வனிதாவுக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் என்று கூறி பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இது குறித்து விசாரித்தபோது வனிதாவுக்கு திருமணம் நடப்பது உண்மை தான் என்பது தெரியவந்தது. வரும் 27ஆம் திகதி வீட்டில் வைத்தே அவர்களின் திருமணம் எளிமையாக நடக்கப் போகிறதாம்.

மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது, “அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் திரைப்படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X