2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ராஜா ராணி

George   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்யா- நான்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படம் பார்த்திருப்பீர்கள் தற்போது கார்த்தியும் - நயன்தாராவும் ராஜா ராணியாக நடிக்கின்றனர்.

ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகியத் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் கார்த்தி நடிக்கும் காஷ்மோரா திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இன்னொரு நாயகியாக ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், இந்தத் திரைப்படத்தின் முதல் பாதி தற்கால கதையில் சென்றாலும், பிற்பாதியில் சரித்திர பின்னணியில் கதையோட்டம் செல்கிறதாம். அதனால், கார்த்தி - நயன்தாரா இருவரும் ராஜாராணி கெட்டப்பில் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறன.

இதற்காக விஜய்யின் புலி திரைப்படத்துக்கு போட்டது போன்று ஒரு பிரமாண்டமான அரண்மனை செட் அமைத்து படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சரித்திர பின்னணியில்தான் முடிகிறதாக சொல்லப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X