George / 2016 மே 12 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-ஜே.ஏ.ஜோர்ஜ்
சிறந்த பாடல் படைப்பாளர்கள் சங்கம் (ஒஸ்கா - OSCA ), டயலொக் தொலைதொடர்பு நிவனத்துடன் இணைந்து வழங்கும் ரித்ம ரெயக் 2016 இசை கொண்டாட்ட நிகழ்வு, கொழும்பு தாமரை தடாகத்தில் எதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இசைத்துறைக்காக தங்களை அர்பணித்துள்ள இலங்கையில் உள்ள பாடகர்களின் நலன் மற்றும் காப்புறுதி வசதிகளை செய்து கொடுப்பதற்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்வு நடத்தப்படுகின்றது.
12 ஆவது தடவையாக இவ்வருடம் நடைபெறவுள்ள இந்த மாபெரும் இசை கொண்டாட்ட நிகழ்வுக்கு இலங்கையின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டயலொக் அனுசரணை வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன் பிரமாண்டமாக முறையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த இன்னிசை இசை இரவு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மற்றும் அறிமுக நிகழ்வு கொழும்பு கலதாரி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் பிரபல பாடகர்களான கீர்த்தி பஸ்குவெல், சமிந்த முதுங்கொட்டுவ, நாமல் உடகம, நெலு அதிகாரி, நிரோஷா விராஜினி, சமிக்க சிறிமன்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன் இசைதுறையுடன் தொடர்புடைய பலரும் அங்கு குழுமியிருந்தனர்.
இதேவேளை ரிதம் ரெயக் 2016 இசை இரவில் பாடகர்கள் பார்வையாளர்களை இசைவெள்ளத்தில் மூழ்கடிக்க தயாராக இருப்பதாகவும் அன்றைய தினத்தில் தங்களது புதிய படைப்புகள் சிலவற்றை அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இந்த இசை நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் தற்போது விநியோகிக்கப்படுவதுடன் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் இடங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago