Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகர் சல்மான்கான், தனது காதலியான ருமேனியாவைச் சேரந்த லுஷீலியா வெண்டரை திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சல்மான்கான் ஒரு புரியாத புதிர். ஒரு பெண்ணை தீவிரமாக காதலிப்பார். சில மாதங்களிலேயே அந்த பெண்கள் அவரை விட்டு பிரிந்து விடுவார்கள். ஐஸ்வர்யாராய், கத்ரினா கைப், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், சங்கீதா பிஜ்லானி, அசின் என பெரிய பட்டியலே உள்ளது.
இந்நிலையில், எனக்கு திருமணம் சரியாக வராது நான் கடைசி வரை பிரம்மச்சாரிதான் என்று சொல்லிக்கொண்டிருந்த 50 வயதாகும் சல்மான்கான் தனது வெளிநாட்டு காதலி லுஷீலியா வெண்டரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ருமேனியாவை சேர்ந்த புகழ்பெற்ற மொடலான லூஷீலியா, சல்மான்கானுடன் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். எனினும், மற்ற காதல்களைபோல இதுவும் முறிந்து போகும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் திருமணச் செய்தி வெளியாகியுள்ளது.
அண்மையில், சல்மான்கானின் பிறந்த நாள் கொண்டாட்டதுக்கு லூஷீலியா வந்தபோது சல்மான்கானின் பண்ணை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. வீதியில் படுத்திருந்தவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் சல்மான்கான் விடுதலையானதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago