2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இல்லை

George   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இரத்துச் செய்ய முடிவுசெய்துள்ளாராம். அத்துடன், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்குமாறு கூறிவிட்டாராம்.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அதன் காரணமாக, சினிமா உள்ளிட்ட துறைகள் முற்றாக முடங்கியும் விட்டன. தற்போது மழை விட்டதால் வழமைக்கு திரும்பி வரும் சென்னை மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும் தெலுங்கு - தமிழ் நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை தாராளமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் வெள்ள நிவாரண நிதிக்காக 10 இலட்சம் இந்திய ரூபாயை ரஜினி வழங்கியிருந்தார்.

வருடாந்தம் டிசெம்பர் 12ஆம் திகதி ரஜினியின் பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையில்லை என முடிவெடுத்த ரஜினி, அந்தப் பணத்தை நிவாரண நிதியாக வழங்குமாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி ரஜினிகாந்தின் 65ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .