2025 மே 15, வியாழக்கிழமை

ரஜினி ரசிகர்களுக்கு புதிய விருந்து

George   / 2016 ஜூன் 16 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபாலி திரைப்படத்தின் புதிய பாடல் டீசர் இன்றிரவு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன. 

கடந்தமாதம் டீசர் வெளியானது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் பாடல்கள் வெளியிடப்பட்டன. 

பெரிய விழாவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இசைவெளியீடு, ரஜினி வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் எளிமையாக இணையத்தில் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், இன்றிரவு 8 மணிக்கு கபாலி திரைப்படத்தின் பாடல் டீசர் வெளியிடப்படுகிறது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதில் அவர், 'கபாலி திரைப்படத்தின் பாடல் டீசரை இன்றிரவு 8 மணிக்கு வெளியிடுகிறேன். அது நிச்சயம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்' என அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .