2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரன்பீர் - கத்ரினா காதல் முறிவு?

George   / 2016 ஜனவரி 18 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை கத்ரினா கைப் இடையேயான காதல் முடிவுக்கு வந்து விட்டதாகத் தகவல் வெளியானதையடுத்து, ரன்பீர் மற்றும் கத்ரினா இரசிகர்கள் சோகத்தில் உள்ளனராம்.

இதேவேளை, இந்த காதல் முடிவுக்கு காரணம் சல்மான் கான் என்றும் சிலர் வதந்தியை பரவவிட்டுள்ளனர்.

ரன்பீர் மற்றும் கத்ரினா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவை அவர்களது பெற்றோர்களும் கைவிட்டுள்ளனராம்.

ரன்பீர் உடனான உறவை முறிப்பதற்கு முன் கத்ரினா, சல்மான் கானிடம் பேசினாராம். இருவரும் சில இடங்களில் சந்திக்கவும் செய்தனராம். ரன்பீரும், கத்ரினாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X