Freelancer / 2021 ஜூன் 03 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன் குடும்பத்தில் ஒளிபரப்பாகும் நாடக தொடர்களில் ரோஜா மெகா தொடர் முதன்மையிடத்தைப் பெற்றுள்ளது.
தற்போது நாடகத்தில் முக்கியமான நீதிமன்ற காட்சிகள் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாடகத் தொடரிலிருந்து ஒரு நடிகை விலக இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த நாடகத் தொடரில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ஷாமிலி. அண்மையில் இவர்தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டார்.
தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதால் கர்ப்பமான இக்காலகட்டத்தில் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அவரது மருத்துவர் அறிவுறுத்திள்ளதால் ரோஜா தொடரிலிருந்து விலகுவதாகவும் மீண்டும் கண்டிப்பாக நடிக்க வருவேன் என்றும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் நடிகை ஷாமிலி.

15 minute ago
25 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
58 minute ago