2025 மே 16, வெள்ளிக்கிழமை

விக்ரமுடன் நித்தியா மேனன்

George   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்தத் திரைப்படத்தில் நடிகை நித்தியா மேனன் நடிக்கவுள்ளாராம்.

இந்தத் திரைப்படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாராவை ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நித்தியா மேனனை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அதேநேரம், பிந்து மாதவி, காஜல் அகர்வால் ஆகியோரை இந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் தற்போது, நித்தியா மேனன் ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உத்தியோகபூர்வமாக கையெழுத்திடும் நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை.

இந்தத் திரைப்படத்தில் படப்பிப்பை மலேசியாவில் ஆரம்பிக்க தீர்மானித்தப்போதும் பின்னர், சென்னைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சென்னை வெள்ளத்தில் மூழ்கியாதால் படப்பிடிப்பு தள்ளிபோயுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .