2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விஜயுடன் மோதும் சூர்யா

George   / 2016 ஜனவரி 26 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜெக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில்; டீசர் வெளியாக உள்ளது. 

இந்தப் திரைப்படம் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளிவர உள்ளதாகச் சொல்லப்திரைப்படகிறது. 

அதே போல சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கியுள்ள '24' திரைப்படமும் தற்போது தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்திரைப்படகிறது.

தெறி, விஜய்யின் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வருகிறது. 'புலி' திரைப்படத்தின் தோல்வியால் இந்தத் திரைப்படத்தில் தெறிக்க விடும் வெற்றியைப் பெற வேண்டும் என விஜய் முடிவெடுத்துள்ளாராம். 

திரைப்படத்தில் பல காட்சிகள் விஜய் இரசிகர்களுக்கு விருந்தாக அமையும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

24 திரைப்படம் விஞ்ஞான திரைப்படம். தெலுங்கில் அனைவர் மனதையும் கவர்ந்த 'மனம்' திரைப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கி உள்ள திரைப்படம். 

சூர்யாவின் சொந்தத் தயாரிப்பான இந்தத் திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்களாம். சூர்யா இதற்கு முன் நாயகனாக நடித்த மாசு என்கிற மாசிலாமணி திரைப்படமும் தோல்வியைத் தழுவியதால் இந்தப் திரைப்படத்தை வெற்றித் திரைப்படமாகக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் உழைத்திருக்கிறாராம்.

விஜய், சூர்யா இருவருமே தங்களது முந்தைய தோல்வியைச் சரிக்கட்ட அவர்களின் அடுத்த வெளியீட்டுப் திரைப்படங்களின் வெற்றிக்காக பெரிய திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளார்களாம். பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி திரைப்படங்களை வெற்றி பெற வைக்க மற்ற சில பணிகளிலும் அவர்களது பங்களிப்பையும் செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X