Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் திரைப்படம் போன்ற அரசியல் கதையில் விஜய் நடிக்கவுள்ள தெறி 2 உருவாகின்றதாம்.
சிலர் எனக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒருகட்டத்தில் அரசியலில் பிரவேசிப்பார்கள். சிலர் அரசியல் ஆசை இருப்பதை சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் அமையாது. ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதை உணர்த்தும் வகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் களமிறங்கியது.
அதோடு, சிலத் திரைப்படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளும் பேசினார் விஜய். ஆனால், அதையடுத்து அவரது திரைப்படங்கள் வெளியாகும்போது ஏற்பட்ட அரசியல் தடைகளால் இப்போது அரசியல் பற்றி அவர் பேசுவதே இல்லை.
ஆனபோதும், தெறி திரைப்படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கும் விஜய், அரசியல்வாதிகளை துவம்சம் செய்கிறாராம். அதோடு, தெறி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிரடியான அரசியல் கதையில் தயாராகிறதாம்.
தற்போது நடித்துள்ள தெறி திரைப்படத்தை அடுத்து பரதன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் விஜய், அந்தத் திரைப்படத்தையடுத்து தெறி-2வில் நடிக்கிறாராம்.
13 minute ago
29 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
42 minute ago
53 minute ago