Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் நடிக்கும் திரைப்படங்களைப்பற்றி எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் கொட்டித்தீர்த்து விடும் சுபாவம் கொண்ட நடிகை அஞ்சலி, இப்போதெல்லாம் வாய்திறப்பதே இல்லையாம்.
பல சமயங்களில் உளறி கொட்டியதற்காக இயக்குநர்களின் கோபத்துக்கு ஆளாகிய அஞ்சலியிடம் இயக்குநர்கள் கதை சொல்லும்போது எந்த விடயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று அவரிடம் கண்டிப்புடன் சொல்லி வாய்ப்பூட்டு போட்டு விடுகின்றனர்.
தற்போது தமிழில் இறைவி, தரமணி, பேரன்பு ஆகியத் திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி, இறைவி திரைப்படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதற்கு முன்பு எப்போதும் பார்த்திராத ஒரு மதிப்பு மிக்க கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளாராம். குறிப்பாக, இறைவி என்று இறைவனுக்கு இணையாக பெண்களை குறிப்பிடும் கதை என்பதால் அதில் அஞ்சலியின் வேடம் சிறப்பு மிக்கதாம்.
அதனால், அந்தத் திரைப்படத்தில் அவரை ஒப்பந்தம் பண்ணியபோது, திரைப்படம் திரைக்கு வருவது வரை எந்தவொரு விடயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கி விட்டாராம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதன்காரணமாகதான், ஊடகங்களிடம் தாராளமாக பேசுவதை தவிர்த்து வருகிறாராம் அஞ்சலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago