2025 மே 15, வியாழக்கிழமை

வியக்கவைக்கும் மஞ்சிமா

Gavitha   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மஞ்சிமா மோகன், ஒரு வடக்கன் செல்பி -என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து வியந்து போன கௌதம் மேனன், சிம்புவை வைத்து தான் இயக்கயிருந்த அச்சம் என்பது மடமையடா படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்கத் தொடங்கியபோதே பல ஹொலிவூட் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் மஞ்சிமா.

அச்சம் என்பது மடமையடா படமே முடிவடையாத நிலையில், விக்ரம்பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா. அதையடுத்து விஷ்ணு நடிக்கும் ஒரு புதிய படத்துக்கும் விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்துக்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, தமிழில் நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மஞ்சிமா மோகன். அதோடு கௌதம் மேனன் படம் திரைக்கு வந்தால் அவருக்கு இன்னும் பெரிய ஹீரோக்களின் படவாய்ப்புகளும் கிடைக்கும் என்று தெரிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .