2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெற்றிவேல் கைகொடுக்குமா?

George   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடித்த தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சசிக்குமார், அந்தத் திரைப்படம் பெரிதாக வெற்றிப்பெறாத நிலையில் தற்போது நடித்துள்ள வெற்றிவேல் திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் மியா ஜோர்ஜ், சசிக்குமாருடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கின்றார். 

இவர்களுடன் பிரபு, தம்பி ராமைய்யா, ரேணுகா, விஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். கார்த்தி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கின்றார்.

இந்தத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து, டப்பிங் மற்றும் ஒலி சேர்ப்பு நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்தத் திரைப்படத்தின் தமிழ்நாட்டு விநியோ உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் எதிர்வரும் மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதலாவது வாரத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .