R.Tharaniya / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று காலை வெளியான நிலையில், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு வழிபாடு செய்தார்.
நடிகர் சிம்பு "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இன்று காலை இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு "அரசன்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் வள்ளலாரை நடிகர் சிலம்பரசன் வழிபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025