Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் தற்போது இயக்குனர் கார்த்திகேயா இயக்கத்தில் மார்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனா. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் கிச்சா சுதீப் படத்தின் அனுபவங்கள் குறித்து பேசினார்.
அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், "மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோஷ்ணி பதிலளிக்கும் முன்பு சுதீப், “இந்த மாதிரி ஒரு கேள்வி கூட படப்பிடிப்பில் வரவில்லை. அதனால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது" என்று கூறி நாயகிகள் இருவரையும் மேடைக்கு மத்தியில் வரவைத்து அமரவைத்தனர்
அதனை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், சார் இவ்வளவு அழகா எம்ஜிஆர் மாதிரி பேசுறீங்.. நீங்களும் விஜய் மாதிரி அடுத்த முதலவர் ஆக ஆசைப்படுறீங்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுதீப் `அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது'' என்று கூறியுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago