S.Renuka / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அது இன்று திங்கட்கிழமை (20) நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளிலும், கட்சி விழாக்களிலும் அவரது மனைவி சங்கீதா பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். விஜய்யின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வசித்து வரும் சூழலில், சங்கீதாவும் அங்கேயே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் பெற்றோர் உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணமாகவே இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாகவே விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விஜய்யின் தரப்பிலிருந்தோ அல்லது அவரது குடும்பத்திலிருந்தோ இது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
வழக்கமாக இத்தகைய வதந்திகள் பரவும்போது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படும். ஆனால், தற்போது நிலவும் மௌனம் ரசிகர்களிடையே மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
அதே சமயம், விவாகரத்து என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்பதால், இதனை அரசியலாக்க வேண்டாம் என்று விஜய்யின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது இன்று திங்கட்கிழமை (20), சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இத்தகைய வழக்கு ஏதேனும் பட்டியலிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஊடகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
விஜய்யின் அரசியல் எதிரிகள் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க இத்தகைய பழைய வதந்திகளை மீண்டும் கிளப்புகிறார்களா? அல்லது உண்மையில் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும். விஜய் தரப்பு மௌனம் கலைத்தால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 minute ago
7 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 minute ago
44 minute ago
56 minute ago