George / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பொலிவூட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் ஆகியோரின் திரைப்படங்களுக்கு இடையில் மோதல் ஏற்படலாம் என பொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கான் நடித்துள்ள தில்வாலே திரைப்படம் டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதுடன் மிகப்பெரும் எதிர்பார்பை உருவாக்கியுள்ள ரண்வீர் சிங்கின் பஜிரோ மஸ்தானி திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகவுள்ளது.
அதனையடுத்து, ஷாருக்கான் நடித்துள்ள பேன் திரைப்படம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சல்மான் நடித்துள்ள சுல்தான் திரைப்படமும் ஏப்ரலில் வெளியிட தயாராகி வருகின்றது.
இந்நிலையில், இரண்டு திரைப்படங்களும் ஒன்றாக வெளியானால் பொக்ஸ் ஓபிஸ் வசூல் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
ஷாருக்கான் மற்றும் ஷல்மான்கானுக்கு அதிக இரசிகர்கள் உள்ளமையால் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் மோதல் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
எனினும் ஒரே நேரத்தில் பெரிய திரைப்படங்களை வெளியிடுவதால் அனைத்துத் திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்தால் சுல்தான் திரைப்படம் வெளிவருவது தாமதமாகலாம் என்று கூறப்படுகின்றது.
இருந்தாலும் இரண்டு திரைப்படங்களும் மோதுகின்றனவா இல்லையா என்பதை அடுத்த வருடம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025