Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாயகன் கமல் ஹாசனின் சபாஷ் நாயுடு திரைப்படத்தில் மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்திலும் மனைவி கௌதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஸ்ருதிஹாசனுக்கும் கௌதமிக்கும் இடையே ஆடை வடிவமைப்பு குறித்து கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கௌதமி, ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதி ஹாசனுக்கு பிடிக்கவில்லை என்றும் வதந்தி பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஸ்ருதி ஹாசனின் செய்தித் தொடர்பாளர் இப்படி சொல்கின்றார், 'தனக்கென்று ஒரு தனி ஸ்டைல், தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார்.
ஒவ்வொரு திரைப்படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.
சபாஷ் நாயுடு திரைப்படத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் நாகரீகப் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி.
ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றால் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி, வடிவமைத்து கொடுத்து இருக்கிறார்.
ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் திரைப்படத்தின் கதைக்கு ஏற்பவும், பாத்திர படைப்புக்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு நாகரீகப் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதி ஹாசனும்; இருப்பார்.
சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி - கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது.
ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி, இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது' என்று கூறியுள்ளார்.
இந்த நீண்ட விளக்கத்தால் ஸ்ருதி-கௌதமி வதந்தி தவிடுபொடியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago