George / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வசீகர நாயகியான ஸ்ரீதிவ்யாவுக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால்தான் வேதாளம் திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகே அந்த வாய்ப்பு லட்சுமி மேனனுக்குப் போயிருக்கிறது. அஜீத்துடன் நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. வேதாளம் பெரிய வெற்றியைப் பெற்று, தனக்குக் கிடைக்க வேண்டிய பெயர் லட்சுமி மேனனுக்குப் போனதில் கூட அவருக்கு வருத்தமில்லை என்கிறார்.
தமிழ்த் திரையுலகத்தில் வரும் புதுமுகமாக இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் பழைய முகமாக இருந்தாலும் சரி அனைவருமே அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றால் அஜீத், வருடத்துக்கு பத்து திரைப்படத்தில் நடித்தால் கூட முடியாது போலிருக்கின்றது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025