2025 மே 14, புதன்கிழமை

ஹீரோ புதுசா? நந்திதாவின் நிபந்தனை

George   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்காத நிலையில், புதுமுக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவும் தயாராகி விட்டார் நடிகை நந்திதா.

அத்துடன், சில இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள அவர், பிரபலமில்லாத நடிகர்களின் திரைப்படங்கள் என்கிறபோது தனக்கான சம்பளத்தை அதிகமாக தர வேண்டும் என்றொரு நிபந்தனையையும் போட்டுள்ளார்.

அவர் சொன்ன சம்பளத்தைக்கேட்ட சில தயாரிப்பாளர்களுக்கு தலைசுற்றி விட, இன்னும் சிலர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார்களாம்.

சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விமல் என்று நடித்து வந்த நந்திதா, உப்புக்கருவாடு திரைப்படத்துக்குப் பிறகு உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காத்திருப்போர் பட்டியல் என்ற திரைப்படத்தில் சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் நடித்த சச்சினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சச்சின் தமிழில் பெரிதாக அறிமுகமில்லாத மலையாள நடிகர் என்பதால் அதை காரணம் காட்டி இந்திய ரூ. 20 இலட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம் நந்திதா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .