George / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நான் எப்போது நடிகர்களை பார்த்து திரைப்படங்களை தேர்வு செய்வது கிடையாது, திரைப்படத்தில் எனக்கான பாத்திரம் என்ன, இயக்குநர் யார் என்பதை பார்த்து தான் திரைப்படங்களில் நடிக்கிறேன் என பொலிவூட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
நான் இயக்குநர்களை நண்பராக பார்ப்பவள். மேலும் என்னுடைய திரைப்படத்துக்கு ஹீரோவும், கதையும் கூடுதல் பலமாக அமைகின்றன என்றும் கூறியுள்ளார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளியான பஜிராவ் மஸ்தானி திரைப்படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ப்ரியங்கா. அவரிடத்தில் எப்போது முன்னணி நடிகர்களுடன் நடிப்பீர்கள் என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த ப்ரியங்கா இவ்வாறு கூறியுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் அடுத்தப்படியாக கங்காஜல் என்றத் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில், ப்ரியங்கா சோப்ரா பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி வெளியாகவுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago