2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஹன்சிக்கு பாதுகாப்பு கொடுத்த ஜீவா

George   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஹன்சிகாவின் பாதுகாவலராக நடிகர் ஜீவா மாறியுள்ளதாக கோடாம்பாக்க ட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

ஜீவா, ஹன்சிகா நடிக்கும் போக்கிரிராஜா திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. 

பாண்டிச்சேரியில் ஹன்சிகாவுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் போல, வழக்கமாக படப்பிடிப்பை வேடிக்கை பார்க்காத பாண்டிச்சேரி மக்கள் போக்கிரி ராஜா படப்பிடிப்பை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தார்கள்.  

ஒருநாள் ரசிகர்கள் கூட்டத்திலும் ஹன்சிகா சிக்கி கொண்டார். பின்னர் அவரை ஜீவா மீட்டு கொண்டு வந்தார். 
அதன்பிறகு ஹன்சிகா கேரவனுக்குள்ளேயே இருந்தாராம். காட்சி வரும்போது அவரை பத்திரமாக அழைத்து வந்து திரும்பவும் கொண்டு விட்டு வரும் பணியை ஜீவாதான் செய்தாராம்.

கிட்டத்தட்ட ஹன்சிகாவின் பொடிகார்டாக இருந்து அவரை பாதுகாத்திருக்கிறார் ஜீவா. ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள திரைப்படக்குழுவினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .