Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கிமூனுக்கு இலங்கையின் இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று பான்கிமூனிடம் கையளிக்கப்பட்டதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதி தொடர்பாளர் பர்ஹான் ஹக் இது தொடர்பாக தெரிவிக்கையில்...
'ஆலோசனை குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையினை செயலாளர் நாயகம் நேற்று பெற்றுக்கொண்டார். இந்த அறிக்கையினை வெளியிடுவதற்கு முன்பாக இலங்கை அரசிடமும் ஒரு பிரதியை கையளிப்பது தொடர்பாக பான்கிமூன் ஆலோசித்து வருகிறார். தற்சமயம் இந்த அறிக்கையினை செயலாளர் நாயகம் பான்கிமூன் ஆழமாக படித்து வருகிறார். அதன்பின்னர் இவ்வறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பார்' என்று பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக எழுந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்கும்படி கடந்த 2010 ஜூன் மாதம் மூன்றுபேர் கொண்ட ஆலோசனை குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கிமூன் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
07 Sep 2025
07 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
07 Sep 2025
07 Sep 2025