2022 ஜூலை 06, புதன்கிழமை

ஒரே நாளில் 7,000 மாணவர்கள் வந்தனர்

Kanagaraj   / 2016 மார்ச் 25 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்கு ஒரேநாளில், மாணவ, மாணவிகள் 7 ஆயிரம் பேர் வருகைதந்தனர் என்று படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 40 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே நாடாளுமன்றத்துக்கு நேற்று வியாழக்கிழமை வருகைதந்திருந்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக, நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள், ஆயிரம் பேரும் வருகைதந்துள்ளனர்.

நாடாளுமன்றம், நேற்றுக்காலை 9.30க்கு கூடி, இரவு 7.30க்கு நிறைவடைந்தது. காலைமுதல் இரவு வரையிலும், மக்கள் கலரி நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .