2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

2 விசைப்படகுகளுடன் 10 இந்திய மீனவர்கள் கைது

George   / 2017 ஜனவரி 05 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

இன்று அதிகாலை ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோமான முறையில் நுழைந்த இரண்டு விசைப்படகுகளை முற்றுகையிட்டதுடன், அதிலிருந்தவாறு மீன்பிடித்த 10 பேரையும் கைது செய்துள்ளனர்.

கைதான அனைவரும் தமிழ்நாடு ஜெகதாப்பட்டிணம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவித்த கடங்படையினர், மேலதிக விசாரணையின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .