Sudharshini / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசாங்கத்தில் மாற்றத்தை உருவாக்கிய நாங்கள், அதன் பலனையும் அனுபவிக்க வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.
வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டில் மூலம், கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள், தளபாடங்கள் ஆகியவற்றை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது மக்களின் பங்களிப்புடன் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. இது எமக்கு மனரீதியான மகிழ்ச்சியை வழங்கிய போதும், எமது மக்களின் முழுப்பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும் போதே, எம்மால் முழு மகிழ்ச்சியை கொண்ட மனநிலையை அடைய முடியும்.
தற்போது ஒரு ஆசுவாசமான நிலையே கிடைத்துள்ளது. ஆனால், எமது மக்களின் தேவைகள், கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படும் போதே விரும்பிய மாற்றத்தை உருவாக்கிய நாம் அதன் பலனை அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால் ஆட்சிமாற்றம் என்பது வெறும் ஆள் மாற்றமாகவே இருக்கும்.
எமது மக்களின் தேவைகளான ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், நிம்மதியான வாழ்வு என்பன நிறைவேற்றப்படும் போதே மாற்றத்தின் முழுப்பலனையும் எம்மக்களால் அனுபவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago