2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாகித்திய கலாசாரப் பெருவிழா

Kogilavani   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறை பிரதேச சலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் பிரதேச சாகித்திய கலாசாரப் பெருவிழா வியாழக்கிழமை (12) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.


இவ்விழாவில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது, கலாபூஷணம் விருது பெற்றவர்களான மறைந்த யு.எல்.எம்.முஸ்தபா(ஆய்வுக்கட்டுரை, ஆக்கம், கலைத்துறை), கே.எல்.அசனார் (கோலாட்டக்கலை, கிராமியக்கவி இலக்கியம்), திருமதி பௌசியா அலியார் (கவிதை, இலக்கியம்,கட்டுரை ஆக்கம், பேச்சுக்கலை), பரீதா இஸ்மாயில்( எழுத்துக்கலை, இலக்கியம், பாட்டு, மேடை நாடகம்) மாகாண சாகித்திய முதலமைச்சர் விருது பெற்றவர்களான யு.எல்.அலியார் (ஆய்வுக்கட்டுரையாக்கம்), மாறன் யு.செயின்( கலை, இலக்கியம்) மாகாண சாகித்திய விருது பெற்றவரான எம்.சி அகமது லெவ்வை  சிறுவர் இலக்கியம்) ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.


இவர்களுடன் சாகித்திய விழா போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் பட்டறை (சமூக கலை சலாசார ஆவணம்) எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டதுடன், மாவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.  இங்கு சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்அப்துல் லத்தீப், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வைத்தியர் எம்.வை.முஸ்தபா, கல்விமான்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .