2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொருட்களின் விலைகளை குறைக்காத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அறியத்தரவும்

Administrator   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா

அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போதும் பழைய விலைகளுக்கே பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தினர் தொடர்பில் உடனடியாக தமக்கு அறியத்தருமாறு யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் திங்கட்கிழமை (23) கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும் சில இடங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் இதுவரை விலை குறைப்பு செய்யப்படவில்லை என பத்திரிகைகள் வாயிலாக அறிந்துக் கொண்டேன்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உத்தியோகபூர்வமாக முறையிட முடியும். குறித்த வர்த்தக நிலையங்களை அடையாளம் காட்டுவதன் மூலம், பாவனையாளர் அதிகாரச சபை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

0771088913 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X