2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடையாள வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Kogilavani   / 2015 மார்ச் 10 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் செவ்வாய்க்கிழமை(9) ஏற்பாடு செய்திருந்த அடையாள வேலை நிறுத்தம் தற்காலியமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ளக ரீதியான விளம்பரம் மூலம் பொதுசன தொடர்பு உத்தியோகத்தர் பதவியடங்களாக பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பொதுசன தொடர்பு உத்தியோகத்தர் பதவிக்குரிய ஆச்சேர்ப்பு திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீண்டும் அப் பதவிக்குரிய விண்ணப்பங்கள், மட்டுப்படுத்தப்பட்ட திணைக்களங்கள் பிரிவுகளுக்கு மாத்திரமே அனுப்பப்பட்டிருந்தன.

இதனால் பல ஊழியர்கள் அடிப்படைத் தகுதிகளை கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்காத காரணத்தினால் குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது.

இது தொட்ர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் எதனையும் கணக்கில் எடுக்காது கடந்த 6ம் திகதி குறிப்பிட்ட பகுதிக்கு நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது சங்கத்தின் கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வுகளும் கிடைக்காத நிலையில் ஒலுவில் வளாகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவிருந்தது.

இவ் வேலை நிறுத்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை(9) தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் கலாநிதி எஸ்.சபீனா தலைமையில்  பேச்சு வார்த்ததை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில், மேற்படி பதவிக்கான விளம்பரத்தை மீண்டும் கோர்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்தே தற்காலியமாக அடையாள வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளோம்' என ஊழியர் சங்க தலைவர் வை.முபாறக் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .