Kogilavani / 2015 மார்ச் 12 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ஆனைவிழுந்தாவப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறுக் கோரி தொழிற்சாலைக்கு முன்னால் நேற்று எட்டாவது நாளாக சத்தியாகிரகப் போரட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் ஈடுபட்டனர்.
இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
சுற்றாடல் துறை பிரதியமைச்சரை சந்தித்த போதிலும் அவர் உறுதியான பதிலை வழங்கவில்லை. இதற்கு வடமேல் மாகாண சுற்றாடல் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனை வடமேல் மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டார்' என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் அப்பிரதேசத்தில் பல பகுதிகளில் பல்வேறு சுலோகங்கள் தொங்க விடப்பட்ட நிலையில் அதிகமான பொதுமக்களும் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
14 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
51 minute ago