2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

3 நாள் வதிவிட அழகுக் கலைப் பயிற்சி

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வேள்ட் விஷன் நிறுவனமும் இணைந்து சுயதொழில் முயற்சியாளர்களான யுவதிகளுக்குரிய 3 நாள் வதிவிட அழகுக் கலைப் பயிற்சி நெறியொன்றை நடத்துகின்றனர்.

கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த யுவதிகள் பங்குபெறும் இந்த மூன்று நாள் வதிவிட செயலமர்வு, சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதையத்தில் நடைபெறுகிறது.

கிரான் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர் த.விந்தியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகஸ்தர் திருமதி நிசாந்தினி அருள்மொழி, வேள்ட் விஷன் நிறுவன கிரான் திட்ட முகாமையாளர் செல்வி தர்மகுலராஜா கவிதா, கிரான் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், ரஜனிகாந்த் உள்ளிட்டோரும் வளவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய கிரான் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர் த.விந்தியன்,

'மட்டக்களப்பு மாட்டத்தில் கிரான் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளை வளப்படுத்தி, வாழ்வாதார, தலைமைத்துவ ஈடுபாடு கொண்டவர்களாக்கி வளர்ந்துவரும் நவீன நவநாகரீக, போட்டித்தன்மையான உலகில் மேம்பாட்டுடன் செயற்படச் செய்யும் நோக்கில் இந்தத் திட்டத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் கிரான் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் யுவதிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும் வாழ்வாதார மேம்பாடும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிரான் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர்' தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X