2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அரங்கு திறப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் இ.சபாலிங்கம் ஞாபகார்த்தமாக கல்லூரியில் அமைக்கப்பட்ட அரங்கு இன்று வெள்ளிக்கிழமை (3) முன்னாள் அதிபர் க.பொன்னம்பலத்தால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டைக் கொண்டாடும் முகமாக இந்த அரங்கு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, நூற்றாண்டு விழா சிறப்பு மலரை பிரதம விருந்தினர் வெளியிட்டு வைக்க பழைய மாணவனும் யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபருமான கே.சண்முகநாதன் அதனை பெற்றுக்கொண்டார்.

அமரர் சபாலிங்கத்தின் திருவுருவப் படத்துக்கு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவனுமான ஈ.சரவணபவன் மலர் மாலை அணிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X