2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வன்னி மாவட்டத்திலிருந்து நெல்லை கொள்வனவுக்கு செய்வதற்கு 20 மில்லியன் ரூபாய் தேவை

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மாவட்டடத்திலிருந்து நெல்லை கொள்வனவுக்கு செய்வதற்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் தேவை என  மதிப்பிடப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வது தொடர்பில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விடுத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சர்; மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும். கால போகச்செய்கையின் காரணமாக வன்னி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது. விவசாயிகளிடம் செல்லும் தனியார் வியாபாரிகள் குறைந்த விலையில் நெல் கொள்வனவை மேற்கொள்ள முயற்சிப்பதாக விவசாயிகள் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 இலட்சம் கிலோ கிராமும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 20 இலட்சம் கிலோ கிராம் நெல்லை கொள்வனவுக்கு செய்வதக்கு நிதி தேவைப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X