2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஜெயாவுக்கு டக்ளஸ் கடிதம்

Menaka Mookandi   / 2015 மே 13 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தனது வாழத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வாழ்த்துக் கடிதமொன்றை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ள தேவானந்தா அதில், 'தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் அமர்ந்து உங்களது நல்லாட்சியை தொடர்வதோடு இலங்கைத் தமிழர்களுக்காக எழுப்பி வந்த உரிமைக் குரலைத் தொடருமாறும்' கோரியுள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'உங்கள் மீது சோடிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில்  இருந்தும் நீங்கள் விடுதலையாகி வந்திருப்பது குறித்து  தமிழகமெங்கும் பெரு மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இந்த மகிழ்ச்சி தனியே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. உங்களது விடுதலையால் தமிழக மக்களை போல் இலங்கைத் தமிழ் மக்களின் மனங்களும் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன.

உண்மைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. இந்த உயிருள்ள தத்துவத்தை உங்களது விடுதலை உலகத்தின் செவிகளுக்கு மறுபடி ஒரு முறை  உரக்க சொல்லியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் உங்களது நேரடி பிரசன்னம் சில காலங்கள் இல்லையென்றாலும் தமிழக மக்களின் மனங்களை நீங்களே தொடர்ந்தும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறீர்கள்.

அது போல் ஈழத்தமிழ் மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கிறீர்கள். மீண்டும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் நீங்களே  நேரில் உட்கார்ந்து, உங்களது நல்லாட்சியை தொடர மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன். இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீங்கள் எழுப்பி வந்த உரிமைக்குரல் தொடர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன்' என்று டக்ளஸ் தேவானந்தா, தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .