2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்காக கிளிநொச்சியில் மகளிர் விவகார அலுவலகம்

Kogilavani   / 2015 ஜூன் 08 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நலன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மகளிர் விவகார அமைச்சின் அலுவலகம் ஒன்று விரைவில் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் திங்கட்கிழமை (8) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகளவு காணப்படுவதுடன், அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளனர். அத்துடன், அவர்களின் சமூக நலன் தொடர்பிலும் போதிய அக்கறை எடுக்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்டச் செயலாளர் கூறினார்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் அமைச்சின் அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான இடதெரிவு செய்யப்பட்டு, வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. மிகவிரைவில் அந்த அலுவலகம் திறக்கப்பட்டு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நலன்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .