2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

8 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 43 வயதானவருக்கு 50 வருட சிறை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டுவயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, அச்சிறுமியை படுகொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தவரைக் குற்றவாளியாக, இனங்கண்ட பதுளை மேல் நீதிமன்றம், அவருக்கு 50 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

43 வயதான நபருக்கே, இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   

தியத்தலாவ, எல்லகம, பாடசாலை கந்த பிரதேசத்திலேயே, இந்த மனித படுகொலைச் சம்பவம், 2013 ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.  

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதான சிறுமியையே, குறித்த சந்தேகநபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, படுகொலை செய்துள்ளார்.   

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, பதுளை மேல் நீதிமன்றத்தில், நீண்டநாட்களாக இடம்பெற்றுவந்த நிலையிலேயே, அந்த வழக்கின் தீர்ப்பு, செவ்வாய்க்கிழமை (11) வழங்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .