Janu / 2024 மார்ச் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக வரவிருக்கும் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 10-ல் பலரும் எதிர்பார்த்த முக்கிய வசதி சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப உலகில் தனித்துவ தயாரிப்புகளின் மூலம் எப்போதும் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆப்பிள் ஆகும் . ஆப்பிளின் வாட்ச்சுகள் பயனர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது .
ப்ளூம்பெர்க் வெளியிட்ட குறிப்பில், ஆப்பிள் சிரீஸ் 10 வாட்ச்சில் இரத்த அழுத்தத்தை அளவிடும் வசதி இணைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே ஆப்பிளில் பயன்பாட்டில் இருக்கும் நாடித் துடிப்பு அளவிடும் சென்சாரை மாற்றியமைத்து இரத்தத்தின் வேகத்தை அளப்பதன் மூலம் அழுத்தத்தை அளவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம், பல்வேறு நேரங்களில் மோசமான உடல்நிலைக்கு காரணமாக அமையும். இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க மருத்துவமனைகளில் அதற்கான கருவி பயன்படுத்தப்படும். ஆப்பிள் இதனை எப்படி சாத்தியமாக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
இந்தாண்டு இறுதியில் புதிய ஐ போன் அறிமுகத்தோடு இந்த அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 hours ago
8 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
07 Dec 2025
07 Dec 2025